ரிலீஸ் நேரத்தில் இந்தியன் படத்திற்கு வந்த சிக்கல்.. – A.R.ரகுமான் தான் காரணமாம்..!

Author: Vignesh
28 June 2023, 4:50 pm

கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்தியன். இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.

1996 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்தது. இதற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்தியன் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது ஸ்டுடியோவில் பாடல்களை கம்போசிங் செய்து ஒரு ஹார்ட் டிஸ்க் மூலம் இந்தியா கொண்டுவந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் அந்த ஹார்ட் டிஸ்கை ஸ்கேன் செய்து உள்ளனர்.

indian -updatenews360

அப்போது, அனைத்து பாடல்களும் டெலிட் ஆகி உள்ளது அதன் பிறகு தான் தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த இயக்குனர் சங்கர் படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டதால் பதட்டமாகியுள்ளார்.

indian -updatenews360

இந்நிலையில், அவசரமாக மீண்டும் பாடல்களை கம்போசிங் செய்து ஏ.ஆர்.ரகுமான் கொடுத்துள்ளார். அதன் பிறகு இந்தியன் படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இந்தியன் 2 படத்தில் அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 360

    0

    0