விஜய் அப்பாவை அரவணைத்து போஸ் கொடுத்த ரோபோ ஷங்கர் மகள்… ஓஹோஹ் விஷயம் இது தானா!

Author: Rajesh
13 February 2024, 4:43 pm

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

அதையடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி , புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது மனைவி பிரியங்காவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நேரத்தில் ரோபோ ஷங்கர் கடந்த ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார் . அதன் பின்னர் தொடர் சிகிச்சை எடுத்து தற்போது நலமாக இருக்கிறார்.

அண்மையில் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இந்திரஜா விஜய்யின் தந்தை SAC’யை அரவணைத்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, விஜய் சார் உடன் பிகில் பண்ணிட்டேன் சந்தோஷம்… இப்போ அவரோட அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சார் கூட பண்றேன் டபுள் ஹேப்பி… பாண்டியம்மா ஹேப்பி அண்ணாச்சி… புதிய படம் “ஐ வான்ட் ஜஸ்டிஸ்” அப்டேட்ஸ் விரைவில் என கூறியுள்ளார். இதன் மூலம் அவர் SAC உடன் பணியாற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 336

    0

    0