அந்த சீனை ஏமாத்தி அப்படி எடுத்துட்டாங்க.. – தனுஷ் படத்தில் நஸ்ரியாவிற்கு நடந்த அநீதி..!
Author: Vignesh17 June 2023, 4:45 pm
மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார். சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான். நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
தற்போது, நஸ்ரியா குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நஸ்ரியா தனது குழந்தைத்தனமான முகபாவனைகளைக் கொண்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தமிழில் இவர் ஒரு சில படங்களில் நடித்தாலும் இவர் பலரது கனவு கன்னியாக இன்று வரை ஜொலித்து வருகிறார்.
பொதுவாக நஸ்ரியா திரைப்படங்களில் மாடன் உடைகளில் நடித்தாலும் கவர்ச்சி இல்லாமல் பார்த்துக் கொள்வது அவரது வழக்கம். இந்த நிலையில், நையாண்டி திரைப்படத்தில் இயக்குனர் சற்குணம் நஸ்ரியாவிற்கு ஒரு இடுப்பு குளோசப் சீன் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டு இருந்ததாகவும், இதற்காக நஸ்ரியாவிடம் கேட்டபோது அவர் நிச்சயமாக முடியாது என மறுத்து விட்டதாகவும், எனவே இயக்குனர் வேறொரு நடிகையை அழைத்து அவரது இடுப்பை சூட் செய்து படத்தில் சேர்த்து விட்டதாகவும், இதனால் நஸ்ரியா இடுப்பை காட்டி நடித்து விட்டார் என அப்போது செய்திகளில் பரபரப்பாக பரவியது.
உடனே பதறிப்போன நஸ்ரியா தயாரிப்பாளர் சங்கத்தை அனுகி இது குறித்து இயக்குனர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அந்த இயக்குனர் பதில் அளிக்கும் போது படத்திற்கு அந்த சீன் தேவைப்பட்டது. அதனால் நஸ்ரியாவிடம் கேட்டேன் அவர் மறுத்துவிட்டதால், வேறொரு பெண்ணை வைத்து எடுத்துவிட்டேன் என்று பதில் அளித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கமும் அது சரிதானே என பேசி இந்த விவாகரத்தை அப்படியே அமுக்கிவிட்டது. இதனால் நஸ்ரியாவுக்கு இறுதிவரை நீதி கிடைக்கவில்லை என பயில்வான் ரங்கநாதன் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.