அந்த அரசியல் வாரிசுடன் நெருக்கம்.. நாளை தீர்ப்பு.. பரபரப்பை கிளப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2024, 1:52 pm

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்தனர்.

இவர்கள் விவாகரத்து வழக்கு 2 வருடமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Divorce Case of Dhanush and Aishwarya Rajinikanth

இந்த நிலையில் 20 வருடமாக அரசியல் வாரிசுடன் நெருக்கமாக இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழியுடன் 20வருட நட்பு குறித்து ஐஸ்வர்யா மனம் திறந்து பேசியுள்ளார்.

கனிமொழியின் அரசியல் பயணத்தை போற்றும் விதமாக, ஒரு யூடியூப் சேனல் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கனிமொழியுடன் தனது நீண்ட கால நட்பு பற்றிய விவரங்களை முதன்முறையாக பகிர்ந்தார்.

Aishwarya Rajinikanth Dhanush Divorce case Hearing Tomorrow

ஐஸ்வர்யா கூறியதாவது: “பொதுவாக நான் எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்ல மாட்டேன். ஆனால், கனிமொழி அக்காவுக்காக நான் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடுவேன். எங்களது நட்பு 20 ஆண்டுகளாக நீடிக்கிறது. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உறவு.

இதையும் படியுங்க: நீயெல்லாம் Second Hand : சமந்தா மீது நெட்டிசன்கள் மோசமான விமர்சனம்..!!

நான் எப்போதும் சோர்வாக இருந்தால், முதலில் போன் செய்து பேசுவது அக்காவிடம்தான். அரசியல் மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் அவர் பேசியதை பார்த்து பல முறை நான் திட்டியுள்ளேன். ‘இன்னும் நல்லா பேசனும்’ என கூறியதுண்டு.

எனக்கு நண்பர்கள் வட்டாரம் குறைவு. விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த நட்பு வட்டாரத்தில் முக்கியமானவர் கனிமொழி அக்கா. அக்காவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும், நான் கோவிலுக்கு செல்லும்போது வழிகாட்டியாக இருப்பவர் அவர்தான். எந்த ஊருக்கு சென்றாலும் அக்காவின் மக்கள் என்னை பாதுகாப்பாக கூட்டிச்செல்வார்கள்.

Aishwarya Rajini Talked About Kanimozhi

கனிமொழி அக்காவை பார்க்கும் போது ரொம்ப Rough ஆக தெரிவார். ஆனால் அவர் சிரித்தால் அவ்வளவு அழகு. அவர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என பகிர்ந்தார் ஐஸ்வர்யா.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 138

    0

    0