ஓவர் சீன் போடும் நயன்தாராவின் ஆட்டம் க்ளோஸ்.. ஷூட்டிங்கில் கண்டீசன் போட்டதற்கு இதுதான் காரணமாம்..!
Author: Vignesh11 March 2024, 3:52 pm
லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.
இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன்தாரா மண்ணாங்கட்டி படத்தின் ஷூட்டிங் அவுட்டோரில் நடத்துவதாக படக்குழுவினர் திட்டமிட்டு இருந்த நிலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் சென்னையிலே ஊட்டிசெட்போட்டு எடுங்கள் என்று கண்டிஷன் போட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால் பலரும் ஓவர் சீன் போடும் நயன்தாராவின் ஆட்டம் க்ளோஸ் இன்று பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், நயன்தாரா அப்படி சொன்னதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, ஷூட்டிங் நடந்து முடிந்துவிட்டது என்றால் அதை மொத்தமாக எரித்து விடுவார்களாம். இப்படி ஊட்டியில் செய்தால் மொத்த அட்மஸ்பியரும் பாழாகிவிடும். அதனால், தான் அந்த மாதிரியான ஒரு சூழலை அங்கே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாம் என்ற நினைப்பில் தான் நயன்தாரா இங்கேயே அதற்கான சொட்களை அமைத்து படப்பிடிப்பை நடத்தலாம் என்று கூறியுள்ளாராம்.