பிகினி உடையில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. பிரபல இந்தி நடிகரின் மகளை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!
Author: Rajesh10 May 2022, 12:59 pm
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அமீர்கான். தற்போது ‘லால் சிங் சாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். அத்வைத் சந்தா இயக்கும் இந்தப் படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கதையாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் அவரது மகள் ஈராகான் அவ்வப்போது சமூக ஊடகத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுவார்.
இந்த நிலையில்
நடிகர் அமீர்கான் பாலிவுட் சினிமாவே பெருமையாக கொண்டாடும் ஒரு சிறந்த நடிகர். நடிப்புக்கு பெயர் போன இவரது நிறைய படங்கள் பெரிய அளவில் சாதனை செய்துள்ளன. அதிகமாக சீனாவில் ஒளிபரப்பான இந்திய படங்களில் இவரது படங்கள் பெரிய பங்கு வகித்துள்ளது. தனது இரண்டாவது மனைவியையும விவாகரத்து செய்து இப்போது மகன், மகளுடன் வசித்து வருகிறார்.
அமீர்கானுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். அண்மையில் அவரது மகள் இரா கானுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இரா கான் தனது பிறந்தநாளை அப்பா மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.
பிறந்தநாள் கேக் கட் செய்யும் போது அமீர்கானின் மகள் இரா கான் அரை நிர்வாண உடையில் இருந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அப்பா முன் இப்படி ஒரு உடையில் இருப்பதாக என மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.