சோசியல் மீடியாவை அலறவிட்ட”இருங்க பாய்”…குரலுக்கு சொந்தக்காரர் இவர் தானா…!

Author: Selvan
11 January 2025, 7:46 pm

வசனத்துக்கு சொந்தக்காரை கண்டு பிடிச்சாச்சு

கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளத்தை திணறடித்த ஒரு வசனம் என்றால் அது இருங்க பாய் தான்,அன்றாட வாழ்க்கையிலும் மக்கள் இதை பொதுவாக பயன்படுத்தும் அளவிற்கு இந்த வசனம் ட்ரெண்டின் உச்சத்திற்கு சென்றுள்ளது.

இந்த குரல் யாருடையது என்று பலரும் அலசி வந்த நிலையில் தற்போது இந்த குரலுக்கு சொந்தக்காரரை கண்டு பிடித்து அவரை பேட்டி எடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Irunga Bai viral voice origin

அதாவது கறிக்கடை பாயா நீங்க?பாய் எனக்கு ஒரு கிலோ கறி வேணும்னு ஒருத்தர் கேட்க,அதற்கு மறுமுனையில் பேசிய நபர் இருங்க பாய் என சொல்லி,எதார்த்தமாக அவரை திட்டிய ஆடியோ வைரல் ஆனது.இதை யாரோ பிராங்காக பண்ண விசயம்,ஆனால் சினிமாவில் அந்த குரல் ஒலிக்கும் அளவிற்கு பிரபலம் ஆனது.

இதையும் படியுங்க: ரஜினியின் தரமான சம்பவம் LOADING …தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட மிரட்டல் வீடியோ…!

ஆம்,அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் சவதிகா பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.அந்த பாடலின் நடுவே இசையமைப்பாளர் அனிருத் இருங்க பாய் என ஒரிஜினல் குரலை வைத்தார்.இதனால் இந்த குரலுக்கு சொந்தக்காரரை எப்படியாவுது கண்டுபிடிக்கணும்னு பலரும் தேடி வந்த நிலையில் தற்போது அந்த குரலுக்கு சொந்த காரரின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஊட்டியை சேர்ந்த ஒரு சாதாரண ஏழ்மையானய விவசாயி ஒருவர் தான் அந்த வசனத்தை பேசியுள்ளார்.வசனம் மிகவும் ட்ரெண்ட் ஆனதால் அவருடைய போன் நம்பருக்கு பலரும் கால் செய்து அவரை நக்கல் அடித்து வருவதாக வேதனையோடு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • Ajith did Cheated the famous actress quits cinema 90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!