அரசியல் கட்சியில் இணைகிறாரா பிரபல நடிகர்? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2023, 2:02 pm

பிரபல நடிகர் அரசியல் கட்சி தலைவரின் புகைப்படத்தை நெஞ்சில் பச்சைக்குத்தியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் செல்லமே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால். பின்னர் இவர், சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும், லத்தி திரைப்படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன. புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கிய லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்தனர்.

இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்தது. லத்தி படத்தினை அடுத்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் விஷால் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் S.J. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஷால், தமது நெஞ்சில் மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ஆரின் முகத்தை பச்சை குத்தியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை அவரது மேலாளர் ஹரி தமது டிவிட்டர் பக்கத்தில் “புரட்சி தலைவரை நெஞ்சில் பச்சைகுத்தி இருக்கும் புரட்சி தளபதி என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், படத்துக்காக விஷால் இப்படி செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 340

    0

    0