தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களுள் ஒருவரான விஜயகுமாரின் சினிமா கெரியரில் மிக முக்கிய வெற்றி படமாக அமைந்தது நாட்டாமை திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் விஜயகுமாருடன் இணைந்து சரத்குமார், மீனா, பொன்னம்பலம்,குஷ்பு , மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பிரபலங்கள் எல்லோரும் சேர்ந்து நடித்திருந்தார்கள்.
1994 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கிராமத்து பின்னணியில் கட்டப்பஞ்சாயத்து ஊரின் நாட்டாமை ஊர் மக்களுக்கு நீதி வழங்கும் நாட்டாமை என முழுக்க முழுக்க கிராமத்து வாசலிலே இந்த படம் வெளியாகி இருக்கும். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஊரில் பெரிய மனிதரான விஜயகுமார் அவரது நேர்மையான குணங்களால் நெருங்கிய உறவினர்களோடு பகை ஏற்படுகிறது.
அவரது மறைவுக்குப் பிறகும் அந்த பகை தொடர்கிறது. அந்த பகை அந்த மனிதரின் மூன்று அந்த பகை விஜயகுமாரின் மூன்று மகன்களையும் பழிவாங்க காத்திருக்கிறார். பின்னர் அதை எதிர்த்து எப்படி வெளி வருகிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை. இந்நிலையில் தற்போதைய படத்தை குறித்த ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, படையப்பா படத்தின் தெலுங்கு தமிழில் சூப்பர் ஹிட் அடித்த நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் மோகன் பாபு நடித்திருப்பார். அந்த படத்தில் சரத்குமார் கதாபாத்திரத்தில் மோகன் பாபு நடிக்க அவரின் தந்தையாக அதாவது விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.
பெத்த ராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படம் 1995இல் வெளியாகி அங்கும் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் அடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.