அனுஷ்காவுக்கு கல்யாணமா ? மாப்பிள்ளை யார் தெரியுமா ?
Author: Udayachandran RadhaKrishnan16 October 2022, 10:56 am
தமிழ், தெலுங்கில் கலக்கிய அனுஷ்கா Weight போட்டதால் யாரும் கண்டுக்கவில்லை . ஆந்திரா , தமிழ்நாடு என்று விமானத்திலேயே பாதி நாட்களை கழித்தவர். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என எல்லா முன்னணி ஹீரோக்களுடனுடன் நடித்து விட்டார்.
அனுஷ்காவுக்கும் டோலிவுட் சூப்பர்ஸ்டார் பிரபாஸ்க்கும் காதல் என்று விவரம் தெரிந்த நாள் முதல் சொல்லிவருகிறார்கள் ஆனால் அவர்களோ நாங்க நண்பர்கள் என்று கூலாக மறுத்து விடுகிறார்கள்.ஆனால், இருவரின் ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அவ்வளவு பொருத்தம் என்பது இன்டஸ்ட்ரி கணிப்பு. வயது ஏறிக்கொண்டே போனாலும் இருவருமே திருமணம் செய்துகொள்ளாததால், ‘உங்களுக்குள்ள என்னதாங்க நடக்குது?’ என்று கேட்காத ரசிகர்கள் இல்லை.
இதுபற்றி ஒவ்வொரு மீடியா சந்திப்பின்போதும், தானாக இப்படியொரு கேள்வி வந்துவிடும். ஆனால், பதில் மட்டும் மழுப்பலாக வரும். நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்த கிட்டதட்ட உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தகவல் வந்திருக்கிறது.
தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட நகைக்கடை தொழிலதிபர் ஒருவர் நடிகை அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெறும் என்றும் தெரிவிக்கின்றன.