அரசியலில் குதிக்கும் அனுஷ்கா?.. பிரபல நடிகைக்கு செக் வைக்க பக்கா பிளான்..!
Author: Vignesh29 March 2024, 4:52 pm
நல்ல அழகு, திறமையான நடிப்பு என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வசீயம் செய்து வைத்திருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. கர்நாடகாவை சேர்ந்தவரான இவர் யோகா டீச்சராக தனது கெரியரை துவங்கினார். அதன் பின்னர் பின்னணி பாடகியாக சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார்.

2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் -நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படம் தான். அதன் பின்னர் 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி தாராளமாக காட்டி நடித்த அனுஷ்கா அருந்ததி திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு கவர்ச்சியை ஏறகட்டிவிட்டு அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.

தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர் வரலாற்று வெற்றி திரைப்படமான பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலம் ஆனார். அந்த படத்தில் நடித்தபோது பிரபாஸ் உடன் காதல் வயப்பட்டு சில வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று மீடியாக்களில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது குறித்து அனுஷ்கா மற்றும் பிரபாஸ் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, ஜோதிகா எப்படி மலையாள பக்கம் சென்று பாலிவுட் பக்கம் சென்றாரோ அதேபோல் அனுஷ்காவும் மலையாள பக்கம் ஒதுங்கி இருக்கிறார். ரோஜின் தாமஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் காத்தனார் என்ற படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளார். மேலும், கையில் கிருஷ்ணர் சிலையுடன் அனுஷ்கா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், அனுஷ்கா செட்டி அரசியலில் குதிக்கப் போகிறார் என தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. அவர், ஆந்திர மாநிலம் நாகரி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார் என்றும், கூறப்படுகிறது. மேலும், நடிகை ரோஜாவை எதிர்த்து தான் ஜனசேனா கட்சி சார்பில் அனுஷ்காவை களமிறக்க இருக்கின்றனர் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த தொகுதியில் தமிழர்கள் அதிகம் என்பது அனுஷ்காவின் பாப்புலாரிட்டி உதவும் என்றும் நம்பப்படுகிறது.