இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். இந்தநிலையில், இந்த வாரம் எலிமினேஷன் யாரென்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது, இவர்கள் ஆறு பேரில் யார் டைட்டிலை ஜெயிப்பார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. வாக்குகள் அடிப்படையில், தான் வெற்றியாளர் யார் என்பது உறுதியாகும். அர்ச்சனாவுக்கு தான் ஆதரவு அதிகமாக இருந்து வருகிறது. அவருக்கு தான் டைட்டில் கிடைக்கும் என ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நேரத்தில், ஆறு போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் நிலையில், பைனலில் வரும் வெறும் 4 போட்டியாளர் தான் வருவார்களாம். இரண்டு பேரை வாரத்தின் இடையிலே Mid Week எவிக்ஷன் செய்ய இருந்த நிலையில், இரண்டாம் முறையாக, விஜய் வருமா பிக் பாஸ் வீட்டை விட்டு Mid Week எவிக்ஷனில் வெளியேறி இருக்கிறார்.
விஷ்ணு இறுதி போட்டிக்கு தேர்வாகி விட்ட நிலையில், அடுத்து அர்ச்சனா மற்றும் மாயாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகி வருகிறது. இவர்களை தொடந்து, தினேஷ் மற்றும் மணி தான் உள்ளனர், இவர்களில் ஒருவர் தான் வெளியேறுவார் என கூறப்படுகிறது.
அர்ச்சனா மற்றும் மாயா இடையே, டைட்டிலை வெல்லப் போட்டி இருந்துதான் வந்து கொண்டிருக்கிறது. அர்ச்சனா மற்றும் மாயா இருவரும் ஆரம்பத்தில் இருந்தே மோதிக் கொண்டிருந்தாலும், பூர்ணிமா வெளியேறிய பிறகு இருவரும் சமரசம் ஆகி ஒன்றாக தான் இருந்து வந்தனர்.
இந்நிலையில், கடைசி வாரத்தில் பழைய போட்டியாளர்கள் மொத்த பேரும் வீட்டிற்குள் மீண்டும் வந்திருக்கின்றனர். அப்போது, ஜோதிகா மாயாவிடம் பேசி மாயாவை தூண்டிவிட்டு மீண்டும் அர்ச்சனாவை பற்றி தவறாக பேசி சண்டை போட வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அர்ச்சனாவுக்கு தான் இப்போது அதிக ஓட்டுகள் வர தொடங்கி இருக்கிறது. பொறாமையின் உச்சத்தில் வனிதாவின் மகள் ஜோவிகா செய்த சகுனி வேலையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அஜித்-ஷாலினி ஜோடி அஜித்-ஷாலினி ஆகிய இருவரும் “அமர்க்களம்” திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதே அவர்களுக்குள் காதல் பூத்தது. அதனை தொடர்ந்து…
கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர்…
உன் Goal என்ன? டாக்டர் ஆகவேண்டும், Engineer ஆக வேண்டும், வக்கீல் ஆகவேண்டும், முதல்வர் ஆகவேண்டும் என பலருக்கும் பல…
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.