முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல்?.. பிரபலம் போட்ட பதிவு..!

Author: Vignesh
24 July 2024, 10:49 am

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi gopi- updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில், இந்த தொடரின் மூலம் மக்களிடம் நன்கு பிரபலமான கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஸ்க்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது.

sathish Gopi-updatenews360

இதனிடையே, சீரியல் குறித்து எப்போதும் சின்ன சின்ன ஹின்ட் கொடுக்கும் கோபி என்கிற சதீஷ் தற்போது இன்ஸ்டாவில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு வாரமும் தொடரில் ஒவ்வொரு பிரச்சினையை வைத்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வரும் பாக்கியலட்சுமி சீரியல் கதையில், இனியா போலீசில் கைது செய்யப்பட இந்த கதைகளும் பரபரப்பாக ஓடும் என தெரிகிறது.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் அட்டகாசமாக நடித்து வரும் கோபி என்கிற சதீஷ் தனது இன்ஸ்டாவில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில், ராதிகா இல்லாமல் பாக்கிய குடும்பத்துடன் கோபி புகைப்படம் எடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கோபி அப்ப ராதிகாவோட நிலைமை என்ன? பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்துகிட்டிங்களா என்று எல்லோரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாக்கியலட்சுமி தொடர் ஒருவேளை முடிவுக்கு வரப் போகிறதா என நிறைய கேள்விகளும் எழுப்பி வருகின்றனர். ஆனால், சதீஷ் சீரியல் முடியறதுக்கு வாய்ப்பே இல்லப்பா என்று தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 223

    0

    0