பூதாகரமாக மாறுகிறதா தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவகாரம்… போனில் மிரட்டிய தனுஷ்.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Rajesh
2 April 2022, 7:01 pm

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

இதனிடையே, நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘பயணி’ ஆல்பத்திற்கு நடிகர் தனுஷ் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நன்றி தெரிவித்தார். இதனால் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த நடிகர் தனுஷின் பெயரை நீக்கினர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . இந்த செயல் தனுஷ், ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி, இருவரும் சேர வேண்டும் என விரும்பி திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் இருவரும் மீண்டும் இணைவதற்கு சாத்தியமே இல்ல என்றே தெரிகிறது.

இதனிடையே, தனுஷ் சமீபத்தில் தன் பிள்ளைகளுடன் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரன்களிடம் ரஜினி அது பற்றி விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் அப்பாவுடன் இருப்பது தான் பிடித்திருக்கிறது கூறியதாகவும், இதனால் அதிர்ந்து போன ரஜினி தன் மனைவியிடம் ஐஸ்வர்யா குறித்து கோபமாக பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தன் மகள் வாழ்க்கையை கெடுத்த தனுஷ் சும்மா விட மாட்டேன் என்று லதா ரஜினிகாந்த் முடிவெடுத்து, தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் தனுஷை வைத்து படம் எதுவும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இதனால் தான் தனுஷுக்கும் தற்போது புதிய படங்களுக்கான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக ரஜினி குடும்பத்தினரிடம் பேசியுள்ளாராம் தனுஷ். இனிமேலும் நீங்கள் என் வழியில் குறுக்கிட்டால் பிரஸ்மீட் வைத்து அனைத்து விஷயங்களையும் போட்டு உடைத்து விடுவேன் என்றும், நான் வெளியில் சொன்னால், உங்கள் குடும்ப மானம்தான் போகும் என்றும் தனுஷ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இப்படி பேசியதால் ரஜினி குடும்பத்தார் வாயடைத்து போயுள்ளனராம். தனுஷ் பிரஸ் மீட் வைக்கப்போவதாக கூறிய இந்த தகவல்தான் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!