எல்லாமே உண்மையா…? விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அசின்!
Author: Shree28 June 2023, 1:50 pm
கேரளத்து பைங்கிளியான நடிகை அசின் நல்ல உயரம், அழகான தோற்றம் , ஸ்லிம் பிட் லுக் என அறிமுகம் ஆனதில் இருந்தே இருந்தே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் அழகால் வசீயம் செய்தவர். ஆரம்பத்தில் பரதநாட்டியக் கலைஞராக இருந்த அசின் 2001 ஆம் ஆண்டில் வெளியான ” நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.
அறிமுகமான முதல் படமே மாபெரும் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்ததால் அசின் புகழ் பாராட்டப்பட்டு தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வந்தார். பின்னர் தெலுங்கில் 2003-ஆம் ஆண்டில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த ” அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி” என்று படத்தில் நடித்தார். அப்படத்திற்காக அசின் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார்.
அது தான் தமிழில் வெளிவந்த எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படம். தமிழிலும் சூப்பர் ஹிட் அடிக்க கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து கஜினி, வரலாறு, போக்கிரி, தசாவதாரம், போன்ற பல ஹிட் படங்களில் நடித்தவர் பாலிவுட்டிற்கு சென்று இந்த பக்கமே திரும்பி பார்க்கவில்லை. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரான ராகுல் ஷர்மாவை காதலித்து 2016ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பதையே நிறுத்திக்கொண்டார்.
அழகான குடும்பம் ஒரு மகள் என நிம்மதியாகி வாழ்ந்து வரும் அசின் தனது கணவர் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதாக கூறி விவாகரத்து செய்யப்போவதாக நேற்று ஒரு பூதாகரமான செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தற்போது அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள அசின், அப்பதிவில்,
“கோடை விடுமுறையில் குடும்பத்துடன் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, இந்த கற்பனையான, கொஞ்சம் கூட நம்பமுடியாத செய்தியைப் பார்த்து சிரித்தோம். இது நாங்கள் எங்கள் குடும்பத்துடன் அமர்ந்து எங்கள் திருமணம் குறித்து திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுக்கு ‘பிரேக் அப்’ ஆகிவிட்டதாக வந்த செய்தியை தான் நினைவூட்டுகிறது. விடுமுறையில் 5 நிமிடத்தை வீணாக்கியதற்காக வருந்துகிறேன். Pls do Better” என்று செம கூலாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.