பிறந்தநாள் அதுவுமா.. பல வருடங்களுக்கு பிறகு ட்விட்டரில் இணைந்த பிரபல இசையமைப்பாளர் : ரசிகர்கள் ஆரவாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2022, 2:14 pm

1986ஆம் ஆண்டு மனசுக்கேத்த மன்னாரு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா.அவர் பல்வேறு முன்னணி நடிகர் படங்களுக்கு இசையமைத்து பாடி உள்ளார்.

இசையமைப்பாளர் தேவாவின் (நவம்பர் 20, 1950) பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும். இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளது.

தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன் படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.

காத்தடிக்குது காத்தடிக்குது… காசிமேடு காத்தடிக்குது…திருப்பதி ஏழுமலை வெங்கடேசா… கவலைப்படாதே சகோதாரா…உள்ளிட்டப் பல பாடல்களை இன்றும் பட்டித்தொட்டியெல்லாம் அவ்வப்போது கேட்க முடிகிறது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இவர் பாடிய ‘ஜித்து ஜில்லாடி’ பாடல் மிகவும் பிரபலமானது. இவர் கடைசியாக 2021இல் சில்லு வண்டுகள் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகர் விக்ரம் சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்தார். இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா ட்விட்டரில் இணைந்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: வணக்கம்! இறுதியாக உங்கள் அனைவரையும் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாளை நடக்கும் தேவா தேவா நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!