கைய புடி.. கண்ணு பாரு.. சீக்ரெட்டாக திருப்பதியில் நிச்சயத்தை முடித்த ஜான்வி கபூர்..!
Author: Vignesh2 September 2023, 4:30 pm
மறைந்த நடிகையும் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாருமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.
குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
. வழக்கம் போலவே ஸ்டார் கிட்ஸ்கள் நடிக்க தெரியாத, திறமை இல்லாமல் திரைத்துறையில் நுழைந்துவிடுகிறார்கள் என விமர்சிக்கப்படுபவர்களில் நைட்க்கை ஜான்வி கபூரும் ஒருவர். இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து படுகவர்ச்சியாக ஆடைகளை அணிந்து கிளாமராக பொதுவெளியில் சுற்றித்திரிந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஜான்விகபூருக்கு திருமண நிச்சயம் முடிந்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடிகை ஜான்விகபூர் தனது நண்பர் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். அப்போது அவரது கையில் பெரிய வைர மோதிரம் ஒன்று இருந்தது.
இதனால் இருவருக்கும் குடும்பத்தினர் சைலன்டாக நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டனரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்னதாக இருவரும் நிறைய இடங்களில் ஒன்றாக காணப்பட்ட போதும் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்விக்கு இருவரும் ஆம் என்றும் இல்லை என்றும் மறுத்து கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.