தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த கவின் லிப்ட் திரைப்படத்தில் நடித்து முகம் அறியப்பட்டார்.
அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார்.
இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ் அவருக்கு ஜோடியாக நடித்தார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாடா திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் வாரி குவித்தது. இதற்கிடையில் அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலி மோனிகாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஒரு படத்துக்காக ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இதன்மூலம், ஆண்டுக்கு ரூ. 1 கோடி வரை வருமானம் கிடைக்கிறதாம்.
அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் கவின் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்து வருகிறார். இவரை குட்டி சிவகார்த்திகேயன் என்றும் கூறி வருகிறார்கள். இதற்கிடையில், கிஸ் மற்றும் ஸ்டார் படங்களில் நடித்து வருகிறார். ஸ்டார் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. தற்போது, நடிகர் கவினின் ஏழாவது படத்திற்கான அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
இந்த அப்டேட்டால் கவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் இயக்குனர் வெற்றிமாறன் தான். கவின் தன்னுடைய ஏழாவது படத்தில் ஹிட் பட இயக்குனரான வெற்றிமாறனுடன் இணைந்து இருக்கிறார். நடிகர் கவினின் ஏழாவது படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம் தயாரிக்கிறது. வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த விக்ரமன் அசோகன் இந்தப் படத்தை இயக்குகிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் கவினுக்கு ஜோடி சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு அடுத்து விஜய் டிவியில் இருந்து வந்த கவின் சினிமாவை கலக்கி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.