கோவை சரளாவின் கெரியரையே காலி செய்த வடிவேலு..- அப்பவே இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கா?..
Author: Vignesh7 June 2023, 10:30 am
நடிகை கோவை சரளா தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ பெற்றுள்ளார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் தனது திறமையை நிருபித்துயுள்ளார். அவரது ‘என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ‘சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற வசனங்கள் இன்று பிரபலம்.

திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த அவருக்கு, ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க செய்து அறிமுகம் செய்து வைத்தார் பாக்கியராஜ்.

கோவை சரளா இன்று வரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும் இறக்க குணமும் நிறைந்தவர். தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார். பல ஏழைக்குழந்தைகளை படிக்க வைத்து வருகிறாராம் கோவை சரளா. முதியோர் இல்லங்களுக்கும் அடிக்கடி சென்று உதவிகளும் செய்து வருகிறாராம்.
மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளினியாகத் திகழும் கோவை சரளா தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது. 25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்து வரும் அவரது இடத்தை இனி எந்தவொரு நகைச்சுவை நடிகையும் ஈடு செய்ய முடியாது என்பதையே நிதர்சனமான உண்மை.
இந்நிலையில், இவர் நடிகர் வடிவேலுடன் இணைந்து மாத்தி மாத்தி கலாய்க்கும் காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. வடிவேலு மற்றும் கோவை சரளா இவர்களுக்கிடையில் ஏற்படும் அடிதடி மற்றும் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக இருந்தது.
இதில் இயக்குனர்கள் படத்தில் கோவை சரளா வடிவேலுவை அடிக்கும் காட்சிகளை அதிகப்படுத்தி வந்தனர். அந்த நகைச்சுவையால் கோவை சரளாவிற்கு திரைத்துறையிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது. இதை பொருத்துக்கொள்ள முடியாமல் எங்கு கோவை சரளா தன்னை விட அதிகம் ஸ்கோர் எடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில், நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படத்தில் கோவை சரளா நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டு உள்ளார். மேலும், தான் படத்தில் நடிக்க மாட்டேன் என்று அடாவடி செய்தும் இருந்ததாக தகவல் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், வடிவேலுவை இழக்க கூடாது என நினைத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர். இதன் காரணமாக கோவை சரளா பல படவாய்ப்புகளை இழந்து உள்ளாராம். ஆனால் இன்றளவும் கோவை சரளாவின் நடிப்பிற்கு ரசிகர் கூட்டம் உள்ளது இருந்து வருகிறது. மேலும், யாராலும் கோவை சரளா இடத்திற்கு வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.