PS-2 படத்தில் நடித்த குட்டி குந்தவை பிரபல நடிகையின் மகளா? அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாங்க!
Author: Udayachandran RadhaKrishnan2 May 2023, 3:59 pm
பொன்னியின் செல்வன் எனும் கல்கி நாவரை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம்தான் பொன்னியின் செல்வன், முதல் பாகம் வெளியாகி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இரண்டாம் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. நாவலில் சிறு மாற்றத்தை வைத்து மணிரத்னம் இயக்கியுள்ளார். படத்தை இயக்கினதற்கே அவரை பாராட்ட வேண்டும்.
முதல் பாகத்தை விட கொஞ்சம் சுவாரஸ்யம், வேகம் படத்தில் குறைவு என்றாலும் அனைவருக்கும் கனக்கச்சிதமாக கதாபாத்திரம் பொருந்தியுள்ளது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் திரிஷாவுக்கு பெரிய அளவு காட்சிகள் இல்லை. குறிப்பாக குட்டி குந்தவையாக படத்தில் நடித்திருந்தவர் நிலா என்ற குழந்தை நட்சத்திரம்.
இவர், பிரபல நடிகர் கவிதா பாரதி – கன்யா பாரதியின் மகளாவார். கவிதா பாரதி பல படங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். அவர் ஜோதிகாவின் ராட்சசி படத்தில் பள்ளி துணை தலைமை ஆசிரியராக நடித்திருப்பார்.
இதே போன்ற நடிகை கன்யா பாரதி, பல சீரியல்களில் நெகட்டிவ் ரோல்கிளல் நடித்து வருபவர், தற்போது அன்பே வா சீரியலில் கதாநாயகனின் (வருண்) தாயாக (பார்வதி) நடித்து வருகிறார்.
இதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அம்மாவின் அழகையே மகள் மிஞ்சிவிட்டார் என புகழ்ந்து வருகின்றனர்.