ராசியில்லாத நடிகையால் விஜய்க்கு வந்த கெட்ட நேரம் – இனிமே அந்த ஹீரோயின் வேண்டாம் என ஒதுக்கும் கோலிவுட்!

Author: Shree
10 April 2023, 10:28 am

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்படுகிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் மாடல் அழகியான முதலில் தனது கெரியரை துவங்கினார்.

2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டேவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. முதன் முதலில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

beast-updatenew360

அறிமுகப்படமே படுதோல்வியடைந்தது அதன் பின்னர் தெலுங்கு பக்கம் சென்று ஒரு சில தோல்வி திரைப்படங்களில் நடித்த அவர் இங்கும் வேலைக்கு ஆகவில்லை என இந்தி பக்கம் சென்றார். இந்தியில் 2016ம் ஆண்டு வெளியான மொஹன்ஜ தாரோ திரைப்படத்தில் ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்து படு தோல்வி கொடுத்தார். இதனால் ராசியில்லாத நடிகையாக முத்திரைகுத்தப்பட்டார் பூஜா ஹெக்டே.

தொடர்ந்து முயற்சித்து தெலுங்கில் துவடே ஜகநாதம், ரங்கஸ்தளம் , ஆல வைகுண்டபுரம்லூ உள்ளிட்ட படங்களை வெற்றி படங்களில் நடித்து மார்கெட் பிடித்தார். பின்னர் மீண்டும் அவரை நம்பி பெரும் பொருட்செலவில் பாகுபலி புகழ் பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால், அந்த படம் அட்டர் பிளாப் ஆனது. தொடர்ந்து , பீஸ்ட் , ஆச்சார்யா, F3, சர்க்கஸ் உள்ளிட்ட படங்கள் மோசமான தோல்வி அடைந்து ராசியில்லாத நடிகையானார்.

pooja hegde-updatenews360

விஜய்யின் பேஸ்ட் படத்தில் வேறு ஹீரோயினை போட்டிருந்தால் ஒரு வேலை படம் ஹிட் அடித்திருக்கலாம் என்கின்றனர் ரசிகர்கள். தற்போது ஒரு முடிவெடுத்த பூஜா ஹெக்டே ஒரு படத்தில் நடிக்க 4 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் தனது சம்பளத்தை 1 கோடி குறைத்து 3 கோடி சம்பளம் வாங்க முடிவெடுத்துள்ளாராம்.

kisi ki bhai kisi ki jaan-updatenews360

தற்போது வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். ஒருவேளை அதுவும் ஓடவில்லை என்றால் பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகை என ஒதுக்கினாலும் ஒதுக்கிவிடுவார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 627

    5

    5