போதை பழக்கத்திற்கு அடிமையாகி கிடந்தாரா பிரியா பவானி ஷங்கர்? கேள்வி கேட்டு பதறிய ரசிகர்!

Author: Shree
26 June 2023, 8:42 pm

சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.

priya bhavani shankar - updatenewse360

ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

priya bhavani shankar - updatenewse360

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்று வருகிறது.

priya bhavani shankar - updatenewse360

கோலிவுட் சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் நேற்று சென்னையில் நடைபெற்ற சர்வதேச போதைப்பொருள் தடுப்பு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் இது போன்ற பழக்கத்திற்கு அடிமையானதுண்டா? என கேட்க அதற்கு பதிலளித்த பிரியா பவானி ஷங்கர், ஆம், நான் சாப்பாட்டு போதை… பலவிதமான சாப்பாட்டுக்களை தேடி பார்த்து சாப்பிடுவேன். எனக்கு மிகவும் பிடித்தது பிரியாணி தான். அது சூப்பர் ஸ்டார் உணவாக இருக்கிறது என்று கூறி சிரித்தார். அந்த கேள்வியால் பதறிப்போன ரசிகர்கள் பிரியா பவானியின் பதிலை கேட்டு பெருமூச்சு விட்டனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 495

    0

    0