தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நடிப்பையும் தாண்டி தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார். மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார். ஆனால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தொடர்ந்து nepotism’மால் தடுத்து நிறுத்தப்படுகிறது.
ஆம், இவரது வளர்ச்சியை பார்த்து பிரபல அரசியல் குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த இளம் நடிகர் பொறாமைப்பட்டு சிவகார்த்திகேயன் career-ஐ செய்ய திட்டமிட்டு அடுத்தடுத்து 4 படங்களை அவரது தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க அக்ரீமண்ட் போட்டாராம். ஆனால், அவர்கள் படமெடுக்காமல் மற்ற எந்த இயக்குனரின் படங்களிலும் நடிக்க விடாமல் தடுக்க திட்டமிட்டு தான் இப்படி செய்தார்களாம். சிவகார்த்திகேயனுக்கு இந்த விஷயம் பின்னர் தான் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் எப்படியோ அவர்கள் பிடியில் இருந்து தப்பித்து வந்தார் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறினார்.
மேலும் சிவகார்த்திகேயனும் இதனை பேட்டி ஒன்றில் கூறி கலங்கி அழுதார். இந்நிலையில் சினிமாவில் சிவகார்த்திகேயன் ஒடுக்கப்படுவது குறித்து பேசிய சவுக்கு சங்கர், இன்று அஜித் விஜய்யை காட்டிலும் சிவகார்த்திகேயன் தான் பெரிய நடிகர் என கூறியுள்ளார். காரணம் அஜித் – விஜய் படங்கள் வருடத்திற்கு இரண்டு தான் வரும் அதில் ஒன்று நிச்சயம் தோல்வி அடைகிறது. ஆனால், சிவகார்த்திகேயன் ஒரே ஆண்டில் நான்கு படங்களில் நடிக்கிறார். அதில் இரண்டு படங்கள் வெற்றி அடைகிறது அப்போ யார் பெரிய ஹீரோ? சிவகார்த்திகேயன் தானே? ஆனால், ஏன் அவர் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கெல்லாம் காரணம் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும், அதை விட்டுவிட்டு படம் தயாரிக்கிறேன். வேறு தொழில் செய்கிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிக்கிறேன் என முதலீடு செய்து மேலும் மேலும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு அகல கால் வைத்ததால் தான் அவர் பெரிய அடி வாங்கினார். அதன்பின்னர் டாக்டர் படத்தின் வெற்றிதான் அவரை தூக்கிவிட்டது. எனவே இனி அது போல் முடிவுகளில் இறங்கக்காமல் இருப்பது தான் அவருக்கு நல்லது என சவுக்கு சங்கர் அட்வைஸ் கூறியுள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.