லியோ படத்தில் சூர்யா நடிக்கிறாரா? ‘நா ரெடி’ பாடலில் இதை கவனிச்சீங்களா?

Author: Shree
23 June 2023, 12:01 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான்.

கோவையை சேர்ந்த இவர் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கி பெரிய கவனத்தை பெற்றார். அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது.

நேற்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ” நா ரெடி’ முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் இப்பாடலில் ரோலெக்ஸ் கத்தி இடம்பெற்றுள்ளது. இதனால் சூர்யா நிச்சயம் இப்படத்தில் இருக்கிறார். அதைத்தான் இப்படி லோகேஷ் மறைமுகமாக தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்திலும் நிச்சயம் கெஸ்ட் ரோலில் தான் நடித்திருப்பார் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 784

    3

    1