தேவ் ஹீரோ ஆகப்போறன்….? ஜோதிகா சொன்ன ஆணித்தரமான பதில்!

Author: Rajesh
23 December 2023, 6:17 pm

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

jyothika

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சிவகுமாருக்கு தன் மகன் ஒரு நடிகையை திருமணம் செய்வதில் விருப்பமே இல்லையாம். தன் ஜாதியில் பெண் எடுத்து திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதாகவும் அது நடக்காததால் மிகவும் வருத்தப்பட்டதாக சிவகுமாரே பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

அதன் பின்னர் தன்னுடைய இளைய மகன் கார்த்திக்கு தன் இஷ்டப்படி தன் சாதிக்கார பேனையே திருமணம் செய்துவைத்து நிம்மதி அடைந்தார். இதையெல்லாம் மனதில் வைத்து சரியான நேரம் பார்த்து பழிவாங்க எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஜோதிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சரி போனால் போகட்டும் என விட்ட சிவகுமாருக்கு மீண்டும் பெரிய இடி கொடுத்தார் ஜோதிகா. ஆம், சூர்யாவை கூட்டிக்கொண்டு தான் பிறந்த மண்ணான மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இதனால் குடும்பத்தில் பெரிய பிரச்சனை என்றெல்லாம் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு பல கேள்விகளுக்கும் வதந்திகளுக்கு பதில் அளித்த ஜோதிகாவிடம் ” உங்கள் மகன் தேவ் சினிமாவில் நடிக்கப்போகிறரா? என்ற கேள்விக்கு ” அட அதெல்லாம் இல்லைங்க… அவன் குட்டி பையன் இப்போ தான் ஸ்கூல் படிச்சிட்டு இருக்கான். நாங்க இன்னும் படத்துல நடிக்க வைக்குறத பத்தியெல்லாம் யோசிக்க கூட இல்லை என ஜோதிகா கூறினார்.

https://www.youtube.com/shorts/ZwsoyU9-DW8
  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!