திசை திருப்பப்படுகிறதா ஹேமா அறிக்கை? பிரபலங்களின் மீது திட்டமிட்டு பொய் புகார்கள்!

Author:
4 September 2024, 11:58 am

திரைப்படத்துறையில் கடந்த சில நாட்களாகவே ஹேமா அறிக்கையின் பாலியல் புகார்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக இயக்குனர், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படத்தைச் சார்ந்த ஆண் ஆதிக்கம் நிறைந்தவர்களால் பெண்கள் பல பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி பொதுவெளியில் வந்து வெளிப்படையாக பகிரங்கமாக புகார்களை கூறி வருகிறார்கள்.

பாலியல் புகார்கள்:

hema-comitteee

மிகப்பெரிய நட்சத்திர நடிகர்கள் பலபேர் இந்த விவகாரத்தில் சிக்கி வருவதால் இந்த விஷயம் பெரும் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக மலையாள சினிமாவில் மோகன்லால் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பிரபலங்கள் மீது தொடர்ந்து அடுத்தடுத்த பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

மேலும் பல நட்சத்திர பிரபலங்கள் மீது நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்ததாக பகிரங்கமாக புகார்களை தெரிவித்து வருகிறார்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை பாவனா ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பி கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் காரில் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த விஷயம் ஒட்டுமொத்த சினிமாவையே உலுக்கி எடுத்தது. இந்த விசாரணையின் பின்னணியில் பிரபல நடிகரான திலீப் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இந்த விஷயம் அப்போது பெரும் பூதாகரமாக வெடித்ததை அடுத்து இதுகுறித்து பெண்களுக்கு பாதுகாப்பிற்காக ஒரு தனி விசாரணை குழு அமைக்க வேண்டும் என கேரளா சினமாவும், கேரளா திரைப்பட நடிகைகளும் ஒன்று கூடி கேரளா அரசு அரசிடம் கோரிக்கையை முன் வைத்தனர்.

Kerala cinema

ஹேமா கம்மிட்டி:

அதை எடுத்து கேரளா முதல்வரான பிரனாயி விஜயன் பெண்களின் பாதுகாப்பிற்காக ஓய்வுபெற்ற பெண் வழக்கறிஞர் ஹேமா தலைமையில் குழு ஒன்றை அமைத்து அதில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்களை தைரியமாக கூறலாம் என கூறியதன் அடிப்படையில் பல பெண்கள் ஹேமா கமிட்டியில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியாகி பல நட்சத்திர பிரபலங்கள் தொல்லையில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகி வருகிறது. அந்த வகையில் பெயர் குறிப்பிட விரும்பாத பல இளம் பெண்கள் கூட பிரபலமான நடிகர்கள் மீது பட வாய்ப்பு வாங்கி தருவதாக என்னை ஏமாற்றியதாக, பாலியல் தொல்லை செய்ததாக பகிரங்கமாக புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த புகார்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள்… பிரபலங்கள் சிலர் அந்த பெண் யார் என்றே எங்களுக்கு தெரியாது. எங்கள் மீது அபாண்டமாக பொய் சுமத்துகிறார்கள். இது மிகவும் பொய்யான தகவல் என புகார்களுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Hema-Committee

திசைத் திருப்பப்படும் பாலியல் புகார்கள்:

இப்படியாக இது ஒரு பக்கம் இருக்க பாலியல் புகார்கள் என்ற பெயரில் ஹேமா கமிட்டியை வேறு ஒரு நோக்கத்தில் திசை திருப்புவதாக கூறப்படுகிறது. அதாவது பிரபலமான நட்சத்திர ஹீரோக்கள் மீது இப்படி அபாண்டமாக பொய் சுமத்தினால் அவர்களின் மார்க்கெட் காலியாகி அவர்களின் சினிமா வாழ்க்கை சரிந்து விடும் என்ற ஒரு நோக்கத்தில் எதிரிகளால் சதி திட்டம் தீட்டப்பட்டு இந்த பாலியல் புகார்கள் பொய் புகார்கள் ஆக உருமாறி இருப்பதாக கேரள சினிமாவில் பலர் திடுக்கிடும் குற்றசாட்டுளை கூறி வருகிறார்கள்.

அப்படித்தான் நேற்று நிவின் பாலின் மீது பிரபலமான ஒரு இளம் பெண் பட வாய்ப்பு வாங்கி தருவதாக பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி புகார் அளித்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுத்திருந்த நடிகர் நிவின் பாலி… அந்த பெண் யார் என்று எனக்கு தெரியாது? எனக்கு அவ பெயரை ஏற்படுத்த நினைக்கும் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை பெற்று தருவேன் என காட்டமாகக் கூறியிருந்தது குறிப்பிடுத்தக்கது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 241

    0

    0