ரஜினி கூட நடிக்க முடியாது… ஜெயலலிதா மறுப்புக்கு காரணமே இதுதான் : பயில்வான் ஓபன் டாக்!!
Author: Vignesh29 ஏப்ரல் 2023, 5:30 மணி
நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிரியாக பார்த்தாரா என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார். பயில்வான் ரங்கநாதன் பிரபல பத்திரிகையாளராகவும் நடிகராகவும் இருந்தது.
சினிமாவை பொருத்தவரை எம்ஜிஆர் சிவாஜி காலம் முதல் தற்போது வரை நன்கு அறிந்தவர் பயில்வான் ரங்கநாதன். சினிமா பிரபலங்களின் ரகசியங்களையும் சினிமாவில் உள்ள நல்லது கெட்டதுகளையும் தெரிந்துள்ள பயில்வான் அவ்வப்போது தான் அறிந்த தகவல்களை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன பிரச்சனை இருந்தது என்பது குறித்தும், ரஜினிகாந்தை ஏன் ஜெயலலிதாவை எதிரியாக பார்த்தாரா என்பது குறித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதில் பயில்வான் ரங்கநாதன் பேசி இருப்பதாவது, எம்ஜிஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக ரஜினிகாந்த் இருக்கிறார். 72 வயதாக ரஜினிகாந்த் இருந்த போதும், இன்னும் ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான்.
இவர் ஆரம்பத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் கே.பாலச்சந்தர் மூலம் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் பின்னர் சூப்பர் ஸ்டார் ஆகாக ஜெலித்து கொண்டு இருக்கிறார். இயக்குநர் கே பாலச்சந்தர் ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர். ரஜினிகாந்த், எஸ்பி முத்துராமன், பஞ்சு அருணாச்சலம், இளையராஜா ஆகியோரின் கூட்டணி சக்ஸஸ் கூட்டணி தான். இவர் ஜெயலிதா சினிமாவை விட்டு விலகிய பிறகு துக்ளக்கில் கட்டுரை எழுதி வந்தார்.
இதனிடையே, ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு அதிக கெடுபிடி காட்டி வந்தார். அவர் கார் சாலையில் செல்லும் போது சாலைகளில் வாகனங்கள் இரு புறமும் நிறுத்தப்படும் என்றும், வாகனங்களை ஆஃப் செய்ய வேண்டும் என போலீசார் மிரட்டுவார்கள் எனவும், ஜெயலலிதாவின் இந்த போக்கு ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். இதனிடையே, ரஜினிகாந்த் எப்போதும் சோளா ஹோட்டலில் இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு நடந்து செல்வது வழக்கம் எனவும், அப்படி, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள போலீசார், ஜெயலலிதான் வீடு இருப்பதால் ரஜினியை நடந்து செல்லக் கூடாது என டார்ச்சர் செய்து வந்ததாகவும்,
இதனால் ரஜினிகாந்த் மன உளைச்சலுக்கு ஆளானார். இருப்பினும் அதை தாங்கி கொண்டு அடுத்த நாள் ஜெயலலிதாவுக்கு போன் போட்டு போலீசார் தன்னை டார்ச்சர் செய்வதை கூறியதாகவும், அதனை தவறாக எடுத்துக்கொள்ளாத ஜெயலலிதா, அவர் வீடும் இங்கேதான் இருக்கிறது. அவர் பாட்டுக்கு நடந்து செல்கிறார், அவரை ஏன் தொல்லை செய்கிறீர்கள்? அவரை இனிமேல் எதுவும் கேட்க கூடாது என போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே அந்த சமயத்தில், ஜெயலலிதா ஆட்சி நடத்திய விதம் ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதால், மூப்பனார்- திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தார் . தமிழ் நாட்டில் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானால் காப்பாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
இதனை கேட்ட மக்களும் ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜெயலலிதா ரஜினிகாந்தை எதிரியாக நினைக்கவில்லை என்றும், ரஜினியின் மூத்த மகளின் திருமணத்திற்கு அழைத்ததும் முதல் ஆளாய் போய் ஜெயலலிதா நின்றார். ஜெயலலிதா தாலி எடுத்து கொடுக்க ரஜினி மகளின் திருமணம் சிறப்பாய் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், சமீபத்தில் யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை என்றும், ரஜினிகாந்த் திடீரென அறிக்கை வெளியிட்டு இருந்தார், அந்த சமயத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மைதான் எனவும், இருப்பினும் தனது மகளின் திருமணத்திற்கு முதல் நபராக ஜெயலலிதா வந்தார் என ரஜினிகாந்த் பாராட்டினார்.
திமுக ஆட்சி நடக்கும்போது ரஜினிகாந்த் ஜெயலலிதாவை பாராட்டியுள்ளார். ஜெயலலிதாவும் ரஜினியை எப்போதும் எதிரியாக நினைக்கவில்லை என்றும், மூத்த சகோதரி என்ற முறையில் ரஜினி மகளின் திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார் .
மேலும், ஜெயலலிதா எப்போதுமே தனது புகுந்த வீடு அரசியல், தாய்வீடு சினிமா என்று தெரிவிப்பார். அதை போன்றே தமிழ் சினிமாவுக்கு ஏராளமான நன்மைகளை ஜெயலலிதா செய்துள்ளார். ரஜினிகாந்தும் அதன் பிறகு ஜெயலலிதாவை விமர்சிக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும், ரஜினிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்கவில்லை எனவும், தயாரிப்பாளர் கே பாலாஜி ஜெயலலிதாவிடம் கதை சொன்னார். அந்த கதையை கேட்ட ஜெயலலிதா, கதை பிடிக்கிறது ஆனால் வேறு ஒருவரை நடிக்க வையுங்கள் என்று மறுத்துவிட்டதற்கு, அப்போது ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததால் மீண்டும் சினிமாவில் நடிக்க மறுத்ததாகவும், மற்றப்படி ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்துக்கும் பிரச்சனை என்பது உண்மையில்லை என பயில்வான் ரங்கநாதன் விலாவரியாக பேசியிருக்கிறார் .
2
4