இப்படி ஒரு பிரம்மாண்ட சாதனையா.? பீஸ்ட் ட்ரைலர் குறித்து சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

Author: Rajesh
3 April 2022, 2:20 pm

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் இவர்களுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் விருப்பதை தற்போது தயாரிப்பு நிறுவனம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் பட ட்ரெய்லரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

இதில், சோல்ஜராக இருக்கும் வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகள் ஹைஜெக் செய்த மாலில் இருக்கிறார். நஜிக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மக்களை எவ்வாறு போராடி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மையக்கருவாக இருக்கும் என தெரிகிறது.

அதன்படி, நேற்று வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரைலரை விஜய் ரசிகர்கள் தற்போது வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். 24 மணி நேரம் ஆவதற்கு முன்பே, அதாவது வெறும் 19 மணி நேரத்தில், பீஸ்ட் ட்ரைலர் 25 மில்லியன் பார்வைகள் பெற்று பெரிய சாதனை செய்து இருக்கிறது. இதை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்து இருக்கின்றனர்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!