பாக்யராஜ் மகள் தற்கொலைக்கு முயல காரணம் இந்த நடிகரா? போட்டுடைத்த பிரபலம்!
Author: Udayachandran RadhaKrishnan25 April 2025, 2:19 pm
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாந்தனு, சரண்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். சாந்தனு நடிகராக உள்ளார். சரண்யா ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார்.
இதையும் படியுங்க: ஆழியாருக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவர்கள் 3 பேர் நீரில் முழ்கி பலி : காண்போரை உருக்குலைத்த காட்சி!
வெளிநாட்டுக்கு படிப்புக்காக சென்ற சரண்யா, காதல் தோல்வியால் 3 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சரண்யா குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார் பத்திரிகையாளர் சபீதா ஜோசப்.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், சரண்யாவை வைத்து பாக்யராஜ் பாரிஜாதம் படத்தை இயக்கினார். இந்த படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்தார். படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.
இருப்பினும், நல்ல கதை என்ற பெயர் கிடைத்தது. ஆனால் சரண்யா உண்மையாக பிரித்விராஜை காதலிக்க தொடங்கினார். இது தெரிந்து பிரித்விராஜ் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் சரண்யாவோ, விழுந்து விழுந்து காதலித்துள்ளார். சரண்யாவை திருமணம் செய்ய முடியாத சூழ்நிலையில் பிரித்விராஜ் இருந்தார். அவருடைய கேரியரை அடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய முனைப்பில் இருந்தார்.

இதனால் சரண்யாவின் காதலை உதறித்தள்ளினார். சரண்யாவை திருமணம் செய்தால் மலையாள சினிமாவில் சறுக்கல் ஏற்பட்டு விடும் என்ற பயமும் இருந்ததால் பிரித்விராஜ் இந்த முடிவை எடுத்தாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சரண்யாவுக்கு சிறிய வயது என்பதால் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை. தற்கொலை முயற்சி எடுக்கும் அளவுக்கு சரண்யா தனது காதலில் நிலைத்து இருந்தார். வீட்டில் சொல்லியும் அவர் கேட்கவில்லை. சரண்யா மீது அதிக பாசம் கொண்ட பாக்யராஜ், அவரை அதில் இருந்து மீள எடுத்த முயற்சிகளும் தோல்வியை தழுவியது.

பின்னர் மெல்ல மெல்ல வெளியே வந்த சரண்யா, ஒரு பக்கம் தொழில் என இருந்தார். பின்னர் பாக்யராஜின் உதவியாளர் ஒருவரை திருமணம் செய்து மகனையும் பெற்றார். இதை பாக்யராஜ் குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பேரன் மீது உள்ள பாசத்தால் தற்போது சேர்ந்துவிட்டனர் என சபீதா ஜோசப் கூறியுள்ளார்.
