ரஜினிக்கு தங்கையாக நடிகை ஷாலினியா? வெளியான உண்மை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2023, 4:47 pm

தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வரும் நடிகர் ரஜினிகாந்த். தனது நடிப்பு, திறமை மூலம் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு உயர்ந்தவர்.

இவரின் நடிப்பில் பல படங்கள் மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் 1999ல் வெளியான படையப்பா திரைப்படம்.

இமாலய வெற்றியடைந்த இந்த திரைப்படத்துக்கு இன்றளவும் ரசிகர்கள் உண்டு. எப்போது இந்த படம் சின்னத்திரையில் ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங் எகிறிவிடும்.

காரணம் , படத்தில் கதாநாயகன் ரஜினிக்கும் வில்லியான ரம்யா கிருஷ்ணனுக்கு நடக்கும் யுத்தம். மிக அற்புதமாக திரைக்கதை எழுதியிருப்பார் கேஎஸ் ரவிக்குமார்.

ஆனால் படையப்பா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் முதலில் ரஜினிக்கு ஜோடியாக மீனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதே போல சிம்ரனை ரஜினிக்கு ஜோடியாக நடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னர் கேஎஸ் ரவிக்குமார், ஏற்கனவே முத்து படத்தில் மீனா நடித்துள்ளதால், அருணாச்சலம் படத்தில் நடித்த சௌந்தர்யாவை அணுகியுள்ளனர்.

அதே போல நீலாம்பதி கதாபாத்திரம் வலுவலானது என்பதால், நடிகை நக்மாவை அணுகியுள்ளனர். பின்னர் தான் ரம்யாகிருஷ்ணனை கமிட் செய்துள்ளனர்.

அதே போல ரஜினியின் தங்கையாக நடிகை சித்தாரா நடித்திருந்தார். இதற்கு முன் ஷாலினியை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.

இதெல்லாம் உண்மையா என ரசிகர்கள் நினைக்கலாம், ஆனால் படையப்பா படத்தின் விக்கிபீடியாவில் இந்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ