அட நம்ம லோகேஷ் கனகராஜா இது? ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ – ஷாக் ஆன ரசிகர்கள்!

Author: Shree
1 July 2023, 10:14 am

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஐட்டம் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அதில் ஆடுபவர் லோகேஷ் கனகராஜா? என எல்லோரும் பார்த்து செம ஷாக் ஆகிவிட்டார்கள். ஆனால், நடனமாடும் அந்த நபர் லோகேஷ் இல்லை… அவரு பேரு பாலா. அவர் கூத்துப்பட்டறை ஆக்டர், ரொம்ப பிரமாதமான நடிகர் ரொம்ப நல்ல மனிதர், ஆனா இப்ப உயிரோட இல்லை என இணையவாசிகள் கூறி வருகிறார்கள். பார்ப்பதற்கு லோகேஷ் போன்றே இருப்பதால் கொஞ்சம் குழப்பம் ஆகிவிட்டது. இதோ அந்த வீடியோ லிங்க்:

https://www.youtube.com/shorts/Cx8vQ24FhdE
  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்