கமலின் ரீல் மகளாக நடித்த அந்த குழந்தையா இது? ரீல் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2023, 6:02 pm

1996ல் வெளியான படம் தான் அவ்வை சண்முகி. நடுத்தர பெண் வேடத்தில் கமல் சும்மா பின்னி பெடலெடுத்திருப்பார். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை செம காமெடி.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் கிரேஷி மோகன் கதை எழுதியிருப்பார். கதாநாயகியாக மீனா, ஹீரா நடித்திருப்பார்.

இந்த படம் 1979ல் வெளியான அமெரிக்க படமான Kramer vs Kramer படத்தின் தழுவல். மேலும் Mrs.Dougtfire படத்தில் இருந்தும் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டது.

இந்த படத்தில் கமல் மீனா குழந்தையாக ஆன்ன் என்பவர் நடித்திருப்பார். சுட்டியாக செம அழகாக நடித்திருந்த அவருக்கு தமிழ்நாடு மாநில விருது வழங்கப்பட்டது.

அதன் பின் அந்த குழந்தை என்ன ஆனார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் அவர் படத்தில் நடிக்க உள்ளார். தற்போது அவர் மீனாவுடன் ஒரு நிகழ்ச்சயில் பங்கேற்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மீனாவே தனது முகநூலில் அதை பதிவு செய்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 427

    0

    0