“ஈரம் பட ஹீரோயினா இது ?” ஆளே அடையாளம் தெரில..”

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2022, 9:49 am

பாரதிராஜாவின் ப்ராடக்ட்ஸ் எதுவுமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது மனோஜ் பாரதிராஜாவை தவிர, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ரியாசென், பிரியாமணி, காஜல் அகர்வால் என்னும் வரிசையில் சிந்து மேனனை கடல் பூக்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

அதற்கடுத்து சரத்குமார் நடித்த சமுத்திரம் என்ற படத்திலும், இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான ஈரம் படத்தின் கதாநாயகியாகவும் நடித்தார்.

கேரளாவைச் சேர்ந்த இவர் முந்தைய காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்தார். இந்த நிலையில் லண்டனை சேர்ந்த ஒருவரை 10 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து லண்டனிலேயே செட்டிலாகிவிட்டார்.

தற்போது இவருக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.இந்நிலையில், தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் அப்லோடியுள்ளார் அம்மணி.

சினிமாவுக்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு தற்போது இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் சிந்து மேனன்.”ஈரம் பட ஹீரோயினா இது ?” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 409

    0

    0