அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. காரணம் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இந்த கேப்பில் அஜித், ” நீங்க எல்லாத்தையும் சரி செய்து வையுங்கள் நான் அதற்குள் வேர்ல்டு ரூர் போய்ட்டு வந்திடுறேன் என கிளம்பிவிட்டார். இதனால் படத்தின் ஷட்டிங் ஆரம்பிப்பார்களா? இல்லையா என சந்தேகம் எழுந்து வந்த நிலையில் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றது.
பின்னர் அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங் ஆரம்பம் ஆனது. இதற்காக அஜித் உட்பட படக்குழுவினர் அங்கு சென்றனர். அஜர்பைஜானில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்,படக்குழுவினர் திடீரென சென்னை திரும்பினர். பின்னர் மீண்டும் அஜர்பைஜானில் நாட்டில் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜுன், திரிஷா, பிக் பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இதனிடையே அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி தல ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தும்.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிகை திரிஷாவின் ரோல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் திரிஷா கயல் என்ற ரோலும் அஜித் அர்ஜுன் என்ற ரோலிலும் நடிக்கிறார்களாம். மேலும் இருவரும் கணவன், மனைவியாக நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் அஜித் ஒரு முக்கிய வேலை விஷயமாக வெளிநாட்டிற்கு செல்ல அந்த சமயம் பார்த்து திரிஷாவை வில்லன்கள் கும்பல் கடத்திவிடுகிறது. அந்த கும்பலிடமிருந்து அஜித் எப்படி திரிஷாவை மீட்கிறார் என்பது தான் ஒன்லைன் ஸ்ட்ரோரி என்று சொல்லப்பட்டது. இக்காட்சி பல அதிரடியான ஆக்ஷன் சீன்களுடன் எடுக்கப்பட்டுள்ளதாம்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.