நா ரெடி தான் வரவா.. திமுக, அதிமுகவிற்கு இனி “‘தமுக” தான் போட்டி.. வைரலாகும் விஜய் கட்சியின் பெயர்?..

Author: Vignesh
30 January 2024, 10:30 am

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், சமீபத்தில் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

Vijay - Updatenews360

இந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையில் பனையூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும், மக்கள் பணிகளை செய்ய தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என ஆலோசனை நடத்திய விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.

Vijay - Updatenews360

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை விரைவில் கட்சியாக பதிவு செய்யப்படும் என நடிகர் விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், வரும் பிப்ரவரி மாதம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay - Updatenews360

இவ்வாறு ஒரு பக்கம் தகவல் வெளியாக்கினாலும், விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக அறிவிக்க உள்ளாரா? இல்லையென்றால், அரசியல் குறித்து அதிகாரபூர்வ நுழைவை அறிவித்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தளுக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில், கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay - Updatenews360

முன்னதாக, இன்னும் ஒரு மாதத்தில் விஜய் அரசியல் கட்சியை அறிவிப்பார் என செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தது. இதனிடையே, த என்ற ஹாஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், விஜய் தொடங்கியிருக்கும் கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. இருப்பினும் இது பற்றி உறுதியான தகவல் ஏதும் வரவில்லை. விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டால் தான் இது உறுதியாகும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 345

    0

    0