பிரபல நடிகரின் திருமணத்தை நிறுத்த திட்டம் தீட்டிய த்ரிஷா.. பகீர் கிளப்பிய சாக்லேட் பாய்..!
Author: Vignesh27 June 2024, 7:31 pm
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்து களைகட்டி வருகிறார். கையில் அடுத்தடுத்து படங்கள் உள்ளன இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருக்கக்கூடிய திரிஷா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், பல படங்களில் நடித்து வருகிறார். திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

அதாவது, ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் ஸ்ரீகாந்த். இவருடைய திருமணத்தை தான் த்ரிஷா தடுத்து நிறுத்த முயற்சி செய்ததாக ஸ்ரீகாந்த் சொன்ன விசியம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, பலரும் ஏன் இவர் ஸ்ரீகாந்தின் திருமணத்தை தடுத்து நிறுத்தினார் என கேள்வி எழுப்பியும் வருகின்றனர். ஸ்ரீகாந்த், வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். வந்தனாவும், திரிஷாவும் மிகச் சிறந்த தோழிகளாக இருந்துள்ளனர்.

இந்தநிலையில், வந்தனா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொள்ளப் போவதாக திரிஷாவிடம் கூறியுள்ளார். அதற்கு த்ரிஷா அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொன்னதோடு, ஸ்ரீகாந்துக்கு சரியாக ஆங்கிலம் பேச வராது என்ற விஷயத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதனை அடுத்து, இந்த விஷயத்தை தனது வருங்கால கணவரிடம் நேரடியாகவே த்ரிஷா இப்படி சொன்னீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதைக் கேட்ட திரிஷா நான் செய்தது பிராங்க் தான் என்று ஓப்பன் ஆக சொன்னதை அடுத்து, அதோடு இந்த பிரச்சனையும் முடிவு பெற்றதாம். எனினும், இது பற்றி தற்போதும் இணையதளத்தில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது. மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் திரிஷா ஸ்ரீகாந்தி திருமணத்தை முயற்சி செய்தாரா என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.