பீச்சில் முட்டி போட்டு ப்ரோபோஸ்… 4-வது திருமணத்தை தேதியுடன் அறிவித்த வனிதா!

Author:
1 October 2024, 5:17 pm

பிரபல சர்ச்சைக்குரிய நடிகையான வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்த மஞ்சுளா விஜயகுமாரின் மகள் ஆவார். 1995ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

vanitha_updatenews360

அதை அடுத்து திரைப்படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்காமல் போனது. பின்னர் திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆன வனிதாவுக்கு திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. இதனிடையே தனது மகள்களுடன் தனிமையில் வசித்து வந்தார்.

இதற்கிடையில் தனது தந்தை விஜயகுமாருடன் சொத்து தகராறில் ஏற்பட்ட பிரச்சனையால் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான வனிதா விஜயகுமாருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது .

Vanitha Vijay kumar

அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு 2005 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதன் பிறகு ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவர் குடிபோதைக்கு அடிமையானவர் எனக்கூறி அவரையும் விவாகரத்து செய்தார்.

பின்னர் பீட்டர் பால் மரணம் அடைந்து விட்டார். வனிதா விஜயகுமாருக்கு விஜய் ஸ்ரீ ஹரி ,ஜோவிகா, ஜெயந்திக்கா என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் இரண்டு மகள்கள் அவருடன் தான் வளர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்….

marriage update

நடிகை வனிதா விஜயகுமார் ராபர்ட் மாஸ்டர் என் கையைப் பிடித்து கீழே முட்டி போட்டு காதல் ப்ரபோஸ் செய்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு அக்டோபர் 5ம் தேதி என தேதியுடன் பதிவிட்டிருக்கிறார் .

இதை அடுத்து ராபர்ட் மாஸ்டருடன் வனிதாவுக்கு திருமணமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அல்லது இது பட தகவலோ ? ஏதேனும் பாடல் கட்சியின் பிரமோஷன் ஆக இருக்குமா என கூட சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள் .

இதையும் படியுங்கள்:அடுத்த ஜென்மத்தில் சூர்யா என் கணவரா வேண்டும்…. பாடகி சுசித்ரா ஏக்கம்!

Love vanitha marriage update New

சரி அக்டோபர் ஐந்து வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்கிறது என்று… முன்னதாக ராபர்ட் மாஸ்டரையும் வனிதா விஜயகுமார் காதலித்து வந்தார். ஆனால், அந்த காதல் நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மூன்று திருமணங்கள் தோல்வியில் முடிந்த வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் நான்காவது திருமணமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி அவரை விமர்சித்து வருகிறார்கள்.

  • Vijay Cameo in Kanchana 4 காஞ்சனா 4ல் தளபதி விஜய்? சஸ்பென்ஸ் வைக்கும் லாரன்ஸ்!!
  • Views: - 331

    0

    0