நீ எத்தனை பேர் குடி கெடுத்திருக்குற தெரியுமா…? விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய பிரபலம்!

Author: Shree
4 August 2023, 9:02 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என ரசிகர்கள் கூறி வருவது பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இது குறித்து பேசியுள்ள பிரபல மூத்த பத்திரிகையாளர் கே ராஜன், விஜய்யை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். “இன்னைக்கு உன் படம் – நாளைக்கு இன்னொருத்தர் வசூல் அதிகமா இருக்கும். அதுக்காக நீ சூப்பர் ஸ்டார் ஆகிடுவியா? உன் தோல்வி படங்களால எத்தனை தயாரிப்பாளர்கள் நாசமாகியிருக்காங்க தெரியுமா?இப்ப வர அவங்களால படம் எடுக்க முடிஞ்சதா?

நீ சூப்பர் ஸ்டார் பட்டதிற்கெல்லாம் ஆசைப்படக்கூடாது. மக்கள் அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற? நம்பர் ஒன்னு நினைச்சா வேறு பட்டத்தை வெச்சிக்க, தப்பில்ல, மக்கள் அன்பால் கொடுத்தா வாங்கிக்க, ஒருவர் வாழும் போது அவர் பெற்ற பட்டத்தை தனக்குன்னு யாராவது சொன்னாங்கன்னு சொந்தகொண்டாடுறது தப்பு.

விஜய் இன்றுவரை ஏதும் சொல்லல. இருந்தாலும் விஜய் பண்ண தப்பு என்னன்னா, வாரிசு பட ஆடியோ லான்ச்சில், சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்ன்னு சொன்னதை, விஜய் அதற்குரியவர் ரஜினிகாந்த் தான் எனக்கு தளபதி பட்டம் போதும் என்று சொல்லி இருந்தால் அவர் புகழ் உயர்ந்திருக்கும். இன்றுவரை ஒரு பதிலும் சொல்லல அதுதான் ஒரு குற்றம் என்று கே ராஜன் தெரிவித்திருக்கிறார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?