விஜய் பகடைக்காயா? லோகேஷின் ஹிட் பட லிஸ்டில் லியோ இல்லை – “தலைவர் 171″ல் சம்பவம் இருக்கு!

Author: Shree
25 October 2023, 1:26 pm

உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்து திரையரங்குங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேக்கிங் சிறப்பாக இருந்தாலும் லோகேஷ் கதையில் கோட்டைவிட்டதாக பலர் கூறி வருகின்றனர். பாடல்களும் மனதில் பதியும்படி இல்லாமல் வழக்கம் போன்ற அனிருத் ஸ்டைலிலே இருந்தது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என தகவல்கள் கூறுகிறது.

SK-Leo-updatenews360

இதனால் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம். ஆம், அவர் தனது ஹிட் படங்களின் லிஸ்டில் லியோவை இணைக்கவே இல்லை என ஒரு தகவல் கிடைத்துள்ளது. லோகேஷ் ரஜினியின் ஜெயிலர் படத்தை பீட் செய்யவேண்டும் என நினைந்து படம் ஆயிரம் கோடி வசூலை தாண்டவேண்டும் என நினைத்தாராம். ஆனால், தற்போது வரை லியோ திரைப்படம் ரூ. 250 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

தொடர் விடுமுறை நாட்களில் படம் வெளியாகி கூட எதிர்பார்த்த வெற்றி பெறாததால் மிகுந்த அவமானமாக உள்ளது என விஜய் ரசிகர்களும் வேதனையில் உள்ளனர். இப்படியான நேரத்தில் லோகேஷ் லியோ படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். அதில் அவர் மும்முரமாக இருக்கிறாராம். விஜய்யை வைத்து படம் இயக்கியதே தனது மார்க்கெட்டை உயர்திக்கொள்வதற்காக தானாம். ஆம் விஜய்யை ஒரு பகடைக்காயாக பயன்படுத்திக்கொண்ட லோகேஷ் அடுத்ததாக தலைவர் 171 படத்தில் விட்டதை திரும்ப பிடிக்க திட்டமிட்டுவிட்டாராம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 463

    1

    0