தமிழ் சினிமாவில் 90களில் ஆரம்பித்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் காமெடி நடிகர் போண்டாமணி. ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் இவரது காமெடி பிரபலம்.
சமீபத்தில் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துவந்தார். இவர் சிகிச்சைக்காக பணமின்றி மிகவும் கஷ்டப்படுவதாக வீடியோ ஒன்று வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதனையடுத்து தமிழக முதல்வர் உட்பட திரைப்பிரபலங்கள் வரை அவரவர் தங்களால் முடிந்த பண உதவி செய்து அவரை காப்பற்றினர். இது குறித்து பிரபல யூடுப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த போண்டாமணி தனக்கு உதவி செய்தவர்களின் லிஸ்ட்டை கூறி நன்றி தெரிவித்தார். போண்டா மணியின் நிலையை அறிந்து மனோபாலா, பார்த்திபன், தனுஷ் என்று பல்வேறு பிரபலங்கள் அவருக்கு உதவி செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக தொடர்ந்து நலமுடன் வீடு திரும்பினார்.
அவரது உடல்நிலை மோசமடைந்து உயோருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் தான் போண்டாமணியின் மகள் +2 தேர்வு எழுதி 600 மதிப்பெண்களுக்கு 400 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று இருக்கிறார். இதற்கு பின்னர் கல்லூரியில் சேர்க்க வேண்டும் அதற்கு பணம் வேண்டும் என்று வேதனையாக இருந்தது என கூறியுள்ள போண்டாமணிக்கு பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மகளின் கல்லூரி செலவுகள் அனைத்தையும் தான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் மகளின் ரிசல்ட்டை அறிந்த உடனே அவருடைய வேல்ஸ் கல்லூரியில் என்ட்ரன்ஸ் கட்டணம், அட்மிஷன் கட்டணம் கூட வாங்காமல் bcs படிக்க சீட் கொடுத்துள்ளார். இது குறித்து போண்டாமணி இப்படி ஒரு நல்ல மனிதர் தெய்வத்திற்கு சமம். இது என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, நான் எப்போதும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.