பிகினியில் பிரபல நடிகருடன் படுநெருக்கமாக தீபிகா படுகோன் – வைரலாகும் வீடியோ..!
Author: Vignesh23 December 2023, 1:44 pm
இந்தி சினிமா மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. பாலிவுட் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் தமிழ் மக்களிடமும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.
நடிகர் ரஜினிக்கு ஜோடியாக அனிமேஷன் படமான கோச்சடையான் படத்திலும் நடித்திருந்தார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் சைடு ஆங்கிளில் கொடுத்துள்ள புகைப்படங்களை இளசுகள் Zoom செய்து பார்த்து ரசித்த புகைப்படங்கள் படு வைரலானது.
முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி ஆடை அணிந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தற்போது, ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி உள்ள ஃபைட்டர் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில், இடம்பெற்றுள்ள Ishq Jaisa Kuch பாடல் வெளியாகி இருக்கிறது. அதை தீபிகா படுகோன் ரித்திக் ரோஷன் உடன் பிகினி ஆடையில் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.