அதுபோன்ற காட்சிகளில் நடிக்க அருவருப்பா இருக்கு… சினிமா வாழ்க்கையை வெறுக்கிறாரா கஜோல்?

Author: Rajesh
13 December 2023, 8:26 pm

மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தற்போது 49 வயதாகும் கஜோல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து படு பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்து பேசிய நடிகை கஜோல், திரைப்படங்களில் இயக்குனர்களுக்கு தேவையான காட்சிகளை படப்பிடிப்பதற்காக உடல் ரீதியாக துன்புறுத்தப்படும் காட்சிகளில் நான் நடிக்கவே மாட்டேன்.

ஒரு ஹீரோ அளவுக்கு மீறி நம்மை தொடும்போது நடிகை என்ற உணர்வு ஒரு அளவிற்கு தான் இருக்கும். எனக்கு uncomfortable ஆக இருக்கும். Physical abuse அல்லது துன்புறுத்தும் வகையிலான காட்சிகளில் நடிப்பது மிகவும் அருவருப்பாக இருக்கும். அது போன்ற காட்சிகளில் நடித்தது மோசமான அனுபவம். ஒரு நல்ல ஹீரோ படுக்கை காட்சியில் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பல வழிகளில் அவர்கள் தங்களின் நடிப்பு திறமைகளை நிரூபிக்கலாம் என கஜோல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 417

    0

    0