எம்ஜிஆரை திருப்திப்படுத்துவது ரொம்ப கஷ்டம்.. பல நாள் கழித்து உண்மையை உடைத்த பிரபலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2023, 3:31 pm

எம்ஜிஆரை திருப்திப்படுத்துவது கஷ்டமான விஷயம் என அவருடன் பணியாற்றிய பிரபலம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி நடிப்பு அசாதாரணமதல்ல. இவர்களை பார்த்து தான் இன்றைய தமிழ் சினமா உலகமே இயங்கி கொண்டிருக்கிறது.

எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு இசை அமைப்பது என்றாலே எம்எஸ்வி தான். சிவாஜி படங்களுக்கு எவ்வாறு இசை, எம்ஜி படங்களுக்கு எவ்வாறு இசையமைப்பது என்று இவர் மட்டும் அறிந்த தனி ரகசியம்.

அப்படி போடும் பாடல்கள் காலத்தை தாண்டி ஒலிக்கும். அப்படி ஒரு சக்தி உண்டு. அதுவும் எம்ஜிஆர் பாடல்களுக்கு அதிகமாக வரி எழுதியவர் வாலி அவர்களே…

எம்ஜிஆர் படங்களில் அதிகமாக அவரை புகழ்ந்து தள்ளக்கூடிய பாடல் மற்றும் அண்ணாவின் சாதனை, தத்துவம் என ஒளிந்திருக்கும்.

சிவாஜிக்கு சோகம், தத்துவம், காதல் என தனி ரகம். இப்படிப்பட்ட சூழ்நிலையல் எம்எஸ்வி சொன்ன ஒரு விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் எம்.ஜி.ஆரும் இசைஞானம் உள்ளவர். பொதுவாக ஒரு படத்திற்கு மெட்டை ஓகே செய்வது இயக்குனர்தான். ஆனால், எம்.ஜி.ஆர் படம் எனில் அதை முடிவு செய்வது எம்.ஜி.ஆர்.தான்.

அவரை அவ்வளவு சுலபமாக திருப்திபடுத்திவிட முடியாது. பல ட்யூன்களை கேட்ட பின்தான் அவர் முடிவு செய்வார். இதுபற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை எம்.எஸ்.வியே பல பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.

20, 30 டியூன்களை போட்டு காட்டுவேன். இது வேண்டாம் அடுத்து என்பார். அதன்பின் முதலில் போட்ட டியூனின் பல்லவியையும், 8வதாக போட்ட சரணமும் நன்றாக இருக்கிறது. இரண்டையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்பார்.

அதேபோல், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திறு ஒரு பாடல் மட்டும் இசையமைக்க வேண்டியிருந்தது. அந்த ஒரு பாடலுக்காக 20 ட்யூன் போட்டுள்ளார்.

எம்ஜிஆர் திருப்தியாக வில்லை, பின்னர் கோபத்தில் மேலும் 15 ட்யூன்களை போட்டு காட்டினேன், எல்லாத்தையும் கேட்டு அமைதியாக யோசித்த எம்ஜிஆர் எல்லாம் நன்றாக இருக்கிறது முதலில் போட்ட ட்யூனே சிறப்பாக இருக்கிறது அதைவே வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

முதலில் போட்ட ட்யூனுக்காக 35 ட்யூன் போட்டு காண்பித்தாக எம்எஸ்வி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்