விஜய், அஜித் பட தயாரிப்பாளர்கள் இடங்களில் ஐடி ரெய்டு.. பரபரப்பில் டோலிவுட்!

Author: Hariharasudhan
21 January 2025, 12:56 pm

தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் நவீன் எர்னேனி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

ஹைதராபாத்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமாக தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள வீடு, தில் ராஜூவின் மகள் ஹன்சிதா ரெட்டி, சகோதரர் சிரிஷ் உள்ளிட்ட உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன்படி, ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கோண்டாப்பூர், கச்சிபெளலி உள்ளிட்ட 8 இடங்களில் இன்று காலை முதல் 35க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் தற்போது பொங்கல் பண்டிகயை ஒட்டி ராம் சரணின் ‘கேம் சேஞ்ஜர்’ மற்றும் வெங்கடேஷ் இயக்கிய ’வஸ்துன்னம்’ ஆகிய படங்களை இவர் தயாரித்திருந்தார்.

இதில் ரூ.450 கோடிக்கு இவர் தயாரித்த ‘கேம் சேஞ்ஜர்’ படம் தோல்வியைச் சந்தித்தது. இதனை ஷங்கர் இயக்கி இருந்தார். ஆனால், ‘வஸ்துன்னம்’ படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.120 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

IT raids Dil Raju and Naveen Yerneni Places

மேலும், தெலுங்கில் சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களின் படங்களை தயாரித்துள்ள தில் ராஜு, தமிழில் விஜயின் ‘வாரிசு’ படத்தையும் தயாரித்திருந்தார்.

இதையும் படிங்க: ஆனந்தை மட்டும் வைத்து ஒன்னும் செய்ய முடியாது.. விஜய்க்கு எஸ்.வி.சேகர் சொன்ன அட்வைஸ்!

அதேபோல், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 தயாரிப்பாளர் நவீன் எர்னேனிக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அஜித்குமார் நடிப்பில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தையும் நவீன் தயாரித்து வருகிறார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!
  • Leave a Reply