அந்த வயசுல தான் எனக்கு உடலுறவு ஆசை அதிகமாச்சு – வித்யாபாலன் Open Talk!
Author: Rajesh29 December 2023, 5:51 pm
பிரபல பாலிவுட் நடிகையான வித்யாபாலன் கதைக்கு தகுந்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பார். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் சொந்த ஊரிலே ராசியில்லாத நடிகையாக முத்திரைகுத்தப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டு வருகிறார்.
தற்போது மும்பையில் வசித்து வரும் இவர் இந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இவர் அஜித்தின் நேர்கொண்டப்பார்வை படத்தில் அவரது மனைவியாக நடித்திருந்தார். அது தான் அவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம். அந்த படத்தில் அவரது நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பேட்டி ஒன்றில் கூட அஜித்துடன் நடித்தது குறித்து கூறினார். அதாவது, ” நான் நடிகையாக வளர்ந்த காலகட்டத்தில் மோகன்லால் படத்தில் கமிட் ஆகினேன். ஆனால் அப்படம் சில காரணங்களால் டிராப் ஆனது. இதையடுத்து மலையாள பத்திரிகைகள் நான் ராசியில்லாத நடிகை என்பதால் தான் படம் டிராப் ஆனதாக செய்திகள் வெளியிட்டது.
இதையே பல தயாரிப்பாளர்கள் நம்பி நான் கமிட்டாகிய படத்தில் இருந்து என்னை அடுத்தடுத்து நீக்கிவிட்டார்கள். தமிழில் கூட பாலசந்தர் இயக்கத்தில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து என்னை நீக்கினார்கள். மேலும், மாதவன் நடிப்பில் ரன் படத்திலும் முதலில் ஒப்பந்தமான என்னை நீக்கினார்கள்.
இதனால் எனக்கு தென்னிந்திய சினிமா மீது அதிக வெறுப்பு இருந்தது. அதிலிருந்து அஜித் தான் என்னை மீட்டெடுத்தார். ஆம், நேர்கொண்ட பார்வை படத்தில் அவருடன் நடித்தது வாழ்நாளில் மிகச்சிறந்த அனுபவம். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு 25 வருட வெறுப்பு நீக்கியுள்ளது என்று மனதில் பட்டத்தை வெளிப்படையாக கூறினார்.
பெரும்பாலும் நேர்காணல்களில் எப்படிப்பட்ட கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் தைரியமாக பதில் சொல்ல கூடியவர் வித்யா பாலன் அப்படிதான் சமீபத்திய பேட்டி ஒன்றில் உடலுறவு குறித்த கேள்விக்கு. நான் 20 – 30 வயது வரை எனது கனவுகளையும், லட்சியத்தையும் , குடும்ப பொறுப்புகளையும் கவனிப்பதிலே ஆர்வம் கொண்டிருந்தேன்.
ஆனால், எனக்கு எப்போது 40 வயதாகியதோ அப்போது தான் உடலுறவின் மீது அதிக ஆசையும் உந்துதலும் ஏற்பட்டது. பெரும்பாலான பெண்களும் என்னை போலவே தான் நினைப்பார்கள். 40 வயதுக்கு பிறகு அவர்களுக்கு பெரிய பொறுப்புகள் இருக்காது. கவலைகள் குறையும் அந்த சமயத்தில் தான் தங்களை அதிக கவர்ச்சியாக உணர்ந்து உடலுறவு குறித்த ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அதீத தீவிரத்துடன் நிறைவேற்றிக் கொள்வார்கள் என கூச்சப்படாமல் கூறினார் வித்யபாலன்.