ரஜினிக்கு அந்த ஆசை வரவைத்த “பெண் தோழி” – சொல்லாமலே அழிந்த காதல்!

Author: Rajesh
20 December 2023, 5:13 pm

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.

rajinikanth

இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதே நின்றுவிடும் என நினைத்தார்கள் ஆனால், 40 வருடத்தை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

ரசிகர்களின் வாழ்த்தும் கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என ரஜினிகாந்த் சந்தோஷமாக கூறி வருகிறார். இன்று சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் பெங்களூரில் பேருந்து நடத்துனராக இருந்தார். அவரது ஸ்டைலும், படபடப்பேச்சும் பேச்சும் பார்த்து அவரது பெண் தோழி ஒருவர் நீ சினிமாவிற்கு நடிக்க சென்றால் நிச்சயம் பெரிய நடிகர் ஆகிடுவ என ஊக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் சென்னை திரைப்பட கல்லூரியில் மாணவர்சேர்க்கை நடைபெறும் விளம்பரத்தை காட்டி அங்கு போக சொல்லி கையில் இருந்த ரூ. 500 பணத்தையும் கொடுத்தாராம். அதன்பிறகு தான் ரஜினி சென்னைக்கு வந்து சூப்பர் ஸ்டார் ஆனார். தன்னை ஊக்குவித்து பெரிய ஹீரோ ஆக்கின அந்த பெண்தோழி மீது ரஜினி மிகப்பெரிய மரியாதையும் அலாதி அன்பையும் வைத்திருந்தாராம். ஆனால், அதன்பின்னர் அவரை சந்திக்க முடியாமல் போக தன் தீவிர ரசிகை லதாவின் காதலை ஏற்று திருமணம் செய்துக்கொண்டார் ரஜினி.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?