ரொம்ப கேவலமா இருந்துச்சு… லவ் டுடே பிரதீப்பை கடுமையாக திட்டிய கெளதம் மேனன்!
Author: Shree17 November 2023, 9:02 am
தமிழ் சினிமாவில் குறும்படம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து நல்ல வரவேற்பு பெற்றவர் இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். தனது 20 வயதிலே கோமாளி படத்தினை இயக்கியிருந்த பிரதீப், லவ் டுடே என்ற படத்தினை எடுத்து மாபெரும் வெற்றியை பெற்று ஹிட் இயக்குனராக முத்திரைகுத்தப்பட்டார்.
இவரது படங்களில் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இளைஞர்கள் பெரும்பாலும் விரும்பி பார்ப்பது போன்று முழு முழுக்க காமெடி ஜானரில் படமெடுத்து வித்யாசம் காட்டுவதே பிரதீப்பின் ஸ்டைல். இது தான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. லவ் டுடே எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்கள் கடந்து திரையரங்கில் ஓடி வசூல் சாதனை படைத்தது.
இப்படத்தின் காட்சி ஒன்றில் பிரதீப் கெளதம் வாசுதேவன் போன்று ஒரு நபரை நடிக்க வைத்திருப்பார். பேட்டி ஒன்றில் அந்த காட்சி குறித்து கெளதம் வாசுதேவனிடம் கேட்டதற்கு உண்மையில் அந்த ரோலில் என்னை பங்கமாக ட்ரோல் செய்திருப்பார். என்னை கூப்பிட்டிருந்தால் நானே அந்த காட்சியில் நடித்திருப்பேன் என கெளதம் வாசுதேவன் கூறினார்.