தமிழின் ஆல் டைம் பேவரைட் முக்கோண காதல்; இந்த ரஷ்ய நாவலா! ஆச்சரிய தகவல்..

Author: Sudha
4 July 2024, 5:53 pm

மூவருக்கு இடையிலான முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு இராமேசுவரம் துறைமுகத்திற்கு அருகில் வசிக்கும் பெண்ணையும் அவளை விரும்பும் இருவரையும் வைத்து கதை நகர்கிறது.

மருது ஓர் அனாதை கப்பல் மாலுமி. இவரின் கப்பல் இராமேசுவரத்திற்கு வருகிறது. கடற்பயணத்தை முடித்துக் கொண்டு அங்கேயே தங்கி விடலாமெனக் கருதுகிறார். கப்பலில் உள்ளவர்களுக்கு பழம், பொருட்களை விற்பனை செய்யும் நான்சி யின் மீது காதல் வயப்படுகிறார்.

நான்சி, ஏற்கனவே அங்கு வந்திருந்த கப்பல் கேப்டனை நினைத்தே வாழ்கிறார். கப்பல் தலைவரும் அவளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறார். அந்த நம்பிக்கையில் மருதுவை ஏற்க முடியாமல் தவிக்கிறார் நான்சி.மருதுவை ஏற்பதா கப்பல் கேப்டனுக்கு காத்திருப்பதா? என்ற குழப்பத்தில் இருந்த நான்சி, வெகு நாட்கள் காத்திருந்தும் அவர் வராததால் மருதுவை ஏற்கிறார்

நிறைவாக யாரை துணையாக ஏற்றுக் கொள்கிறார் என முடிகிறது கதை.தேசிய அளவிலான தமிழ்த் திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது இந்த திரைப்படம்.

கதையைக் கேட்டவுடன் அறிந்திருப்பீர்கள். இது “இயற்கை” திரைப்படம்.

இயற்கை 2003 ஆம் ஆண்டில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்.இப்படத்தில் ஷாம், அருண் விஜய், குட்டி ராதிக, சீமா, பி வாசு ஆகியோர் நடித்திருந்தனர்.வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்நாவல் 30மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

  • actress sona shared about issue between vadivelu and her வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்