ஜாக்குலின் எலிமினேட்… பணப் பெட்டியை தூக்கிய போட்டியாளர் : கிளைமேக்சில் பிக் பாஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan16 January 2025, 1:01 pm
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பவித்ரா, முத்துக்குமரன், ரயான், ஜாக்குலின், விஷால், சௌந்தர்யா என குறைவான போட்டியாளர்களே உள்ளனர்.
இதையும் படியுங்க: பல கோடிக்கு நாமம் போட்ட லோக்கல் டிவி…அதிர்ச்சியில் கேம் சேஞ்சர் படக்குழு..!
இந்த நிலையில் இடையில் திடீர் எலிமினேஷன் நடந்து. அதாவது, வீட்டுக்குள் பெட்டி அனுப்பப்படும், அதை போட்யாளர்கள் விருப்பப்பட்டால் எடுத்துக்கொண்டு செல்லலாம்.
ஆனால் இம்முறை கதவை தாண்டி ஓடிச் சென்று பெட்டியை எடுத்து குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் பெட்டியை எடுத்துக்கொள்ளலாம். அதில் ஜாக்குலின் தோற்றதல் எலிமினேட் ஆகியுள்ளார்.
ஜாக்குலின் எலிமினேட் ஆனது அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கோபமான பதிவுகளை போட்டு வருகின்றனர்.
அதே சமயம் பணப்பெட்டியை விஷால் கைப்பற்றியுள்ளார். 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு சௌந்தர்யா கத்த கத்த விஷால் கெத்துக்காட்டியுள்ளார்.
இனி அடுத்தடுத்தது என்ன நடக்கப் போகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.