தேசிய விருதில் புறம் தள்ளப்பட்ட “ஜெய் பீம்” திரைப்படம் – ஆதங்கத்தில் சூர்யா!

Author: Shree
24 August 2023, 10:10 pm

ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் நடத்தப்பட்டு அதில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் விருது வழங்கி கௌரவித்து வருகிறார்கள். அந்தவகையில் 2021 ஆம் ஆண்டிற்கான 69 ஆவது தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று அறிவித்தார்.

புது தில்லியில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழகத்தை சேர்ந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரிதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படத்திற்கு விருது கிடைக்காதது பலதரப்பட்ட மக்களை மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது. இதில் சிறந்த படமாக மாதவன் நடிப்பில் வெளிவந்த ராக்கெட்ரி – தி நம்பி எபெக்ட்ஸ் (ஹிந்தி) படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் மொழிவாரித் தேர்வில் தமிழில் சிறந்த படமாக “கடைசி விவசாயி” தேர்வாகியுள்ளது.

உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்,  சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. ஓடிடி தளத்தில் கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. 

இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. பல்வேறு தடைகளை கடந்து சாதித்த ஜெய் பீம் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தும் சிறந்த படத்திற்கான விருது கிடைக்காது கொஞ்சம் ஏமாற்றம் தான் என்றாலும் ” கடைசி விவசாயி” திரைப்படத்திற்கு விருது கிடைத்திருப்பது கொஞ்சம் மனதை தேற்றியுள்ளது.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்